உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜோதிடர் வீட்டில் திருட்டு

ஜோதிடர் வீட்டில் திருட்டு

வாழப்பாடி: வாழப்பாடி, அய்யாக்கவுண்டர் தெரு, அரிமா சங்க பின்புறம் குடியிருந்து வருபவர் கார்த்திகேயன்(34). ஜோதிடரான அவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு, ஆத்தூர் அடுத்த வீரங்கி அய்யனார் கோவிலுக்குச் சென்றுள்ளார். நேற்று மாலை வீடு திரும்பிய அவர், வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கப்பணம், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல் ஃபோன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.அதுகுறித்து வாழப்பாடி போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்த மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி