உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளாட்சிகளில் குவிந்த வேட்பாளர்கள்

உள்ளாட்சிகளில் குவிந்த வேட்பாளர்கள்

கோபிசெட்டிபாளையம்: வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, மாவட்டம் முழுவதுமுள்ள நகராட்சி, யூனியன் அலுவலகங்களில் வேட்பாளர்கள் குவிந்து விட்டனர்.கோபி நகராட்சி மற்றும் கோபி யூனியனுக்கு அக்., 17ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. செப்., 22ம் தேதி துவங்கிய வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது.வேட்பு மனுத்தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர்.கோபி நகராட்சியில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அமாவாசை நாளன்று வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டதால், காங்கிரஸ் கட்சியை சார்ந்த வேட்பாளர் மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தார். நேற்று வேட்பாளர் சித்ரா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சென்று, மனுத்தாக்கல் செய்தார்.வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்கள் நேற்று தேர்தல் அலுவலகம் முன் குவிந்தனர். தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள சத்தி ரோடு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். தேர்தல் அலுவலகத்துக்குள் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதில், பலரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வெள்ளகோவில்: வெள்ளகோவில் நகராட்சியில் மொத்தம் 152 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.நகராட்சியில் தலைவர் பதவிக்கு முக்கிய கட்சிகள் உட்பட 13 வேட்புமனுக்களும், 21 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 139 வேட்புமனுக்களும் பெறப்பட்டுள்ளது.வெள்ளகோவில் யூனியனில் மாவட்ட கவுன்சிலர் வார்டு எண் 9க்கு ஏழு பேரும், யூனியனில் உள்ள ஒன்பது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 63 பேரும், ஒன்பது பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 55 பேரும், 72 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 302 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.முத்தூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒன்பது பேரும், 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 70 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை