உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 24வது வார்டு தே.மு.தி.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

24வது வார்டு தே.மு.தி.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி 24வது வார்டில் தே.மு.தி.க., வேட்பாளர் மகேந்திரன், தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.ஈரோடு மாநகராட்சி 24வது வார்டில் தே.மு.தி.க., சார்பில் மகேந்திரன் போட்டியிடுகிறார். மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர், வீரப்பன்சத்திரம் நகர கழக பொறுப்பாளராக இருந்துள்ளார். வீரப்பன்சத்திரம் நகராட்சி 11வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மகேந்திரன், 24வது வார்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பாதாள சாக்கடை திட்டத்துக்கு மக்களிடம் இருந்து வைப்பு தொகை வசூலிக்க கூடாது என, நகராட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த இவர், அதுகுறித்து செய்திதாளில் வெளியான செய்தியை நகல் எடுத்து, பொதுமக்களுக்கு வழங்கி, தனக்கு ஆதரவு அளிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை