உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொடரும் நூல் விலை உயர்வால் ஜவுளி மீட்டருக்கு ரூ. 3 உயர்வு

தொடரும் நூல் விலை உயர்வால் ஜவுளி மீட்டருக்கு ரூ. 3 உயர்வு

ஈரோடு: தொடரும் நூல் விலை உயவு காரணமாக ஜவுளி விலை அதிகரித்து வருவதால் ஜவுளி வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஜவுளி உற்பத்தியில் கேந்திரமாக ஈரோடு மாவட்டம் திகழ்கிறது. ஈரோடு, பவானி, சென்னிமலை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு, வீரப்பன் சத்திரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஜவுளி உற்பத்தி செய்கின்றனர்.பருத்தி விலை மீண்டும் உயர்வதால், நூல் விலையும் 50 கிலோ கொண்ட பை 1,160 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வெப்ட் நூல்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதில், லுங்கி, பாவடை, சேலை, வேட்டி உள்பட காட்டன் ஆடைகள் தயார் செய்து வெளிமாநிலங்களுக்கும், திருப்பூரில் தயார் செய்யும் பின்னலாடைகளை உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.நூல் விலை உயர்வு எதிரொலியால், மீண்டும் காட்டன் துணிகள் மீட்டருக்கு 3 ரூபாயும், பனியன் டஜனுக்கு 20 ரூபாயும் அதிகரித்துள்ளது. வரும் 26ந் தேதி தீபாவளி பண்டிகை துவங்க இருப்பதால், ஜவுளி விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஜவுளி துணிகள் விலை உயர்வால், வெளிமாநில வியாபாரிகள் மற்றும் உள்ளூர் சில்லரை வியாபாரிகள் விலையை குறைக்க கோரி வலியுறுத்துகின்றனர்.பண்டிகை சீஸன் துவங்க உள்ள நிலையில், இந்த விலை உயர்வு ஜவுளி விற்பனை குறைய வாய்ப்புள்ளது. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை