உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் அலுவலர்களுக்கு கோபியில் பயிற்சி முகாம்

தேர்தல் அலுவலர்களுக்கு கோபியில் பயிற்சி முகாம்

கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சி ஓட்டுசாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது.கோபி நகராட்சியில் உள்ள 38 ஆயிரத்து 710 வாக்காளர்கள் ஓட்டு போட, 53 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதி கட்ட பயிற்சி வைரவிழா பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சண்முகம், தேர்தல் மையங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து மைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆர்.டி.ஓ., பழனிசாமி, நகராட்சி கமிஷனர் ஜான்சன், தாசில்தார் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதுபோல், கோபி யூனியன் ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான விளக்க கூட்டம் சீதா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.பி.டி.ஒ., சிவபாலன் பேசுகையில், ''உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் படி, வேட்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் நாளான்று ஏஜன்டுகள் சாப்பிட கேன்டீன் வசதி செய்யப்பட்டுள்ளது. பிரச்சாரத்துக்கு முறையான அனுமதி வாங்க வேண்டும். செலவு பட்டியலை வேட்பாளர்கள் பராமரிக்க வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து வார்டுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய், யூனியன் வார்டுக்கு 56 ஆயிரத்து 250 ரூபாய், பஞ்சாயத்து தலைவர் 22 ஆயிரத்து 500 ரூபாய் வரையே தேர்தல் செலவு செய்யலாம். தேர்தல் செலவு கணக்கை கோபி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் காண்பிக்க வேண்டும்,'' என்றார்.டி.எஸ்.பி., சுந்தர்ராஜன், 130க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை