மேலும் செய்திகள்
கும்பாபிஷேக விழா
31-Jan-2026
தனியார் பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
31-Jan-2026
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
31-Jan-2026
கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா
31-Jan-2026
ஈரோடு: கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை வைத்து பிரச்சாரம் செய்ததாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேர் தேர்தல் விதி மீறல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. பிரச்சாரத்தின் போது, அரசியல் கட்சி பிரமுகர்கள் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு இடையூறு தரும் விதமாக பிரச்சாரம் செய்யக்கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பிரச்சாரம் செய்வோர் மீது ஈரோடு மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஈரோடு பெரிய சேமூரை சேர்ந்த ஆனந்தன்(29), பெருந்துறை அருகே கம்புளியாம்பட்டி மோகன்ராஜ்(28), சோலார்புதூர், பாலுசாமி நகர் காதர் அலி(32), திண்டல், புதுகாலனி அலாவுதீன் சித்திக்(23), அதேபகுதியை சேர்ந்த தனசேகர்(24), வில்லரசம்பட்டி சண்முகசுந்தரம்(52), நெருஞ்சிப்பேட்டை கார்த்திகேயன்(25) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
31-Jan-2026
31-Jan-2026
31-Jan-2026
31-Jan-2026