முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
ஈரோடு::ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்கள் சார்ந்தோர், விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. கோரிக்கை தொடர்பான மனு பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, 'உரிய நடவடிக்கைக்கு' அறிவுறுத்தினர். நிலுவை மனுக்களை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தில், தொழில் துவங்க, ஒரு கோடி ரூபாய் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் கடனுக்கு, 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இத்திட்டத்தில் பெறப்பட்ட மூன்று மனுக்களை ஆய்வு செய்து, வங்கி கடன் வழங்க அனுப்பி வைத்தனர். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, முன்னாள் படைவீரர் நலன் கண்காணிப்பாளர் புஷ்பலதா, லெப் கர்னல் (ஓய்வு) நாகராஜன், நல அமைப்பாளர் சாமுவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.