புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி கடத்தல்
காங்கேயம்: காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் வட்டமலை, சேடங்காளிபா-ளையம் ஆதிதிராவிடர் காலனி அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், 15 அடி ஆழத்துக்கு மண் வெட்டி லாரி-களில் கடத்தி சென்றனர். இதுகுறித்து காங்கேயம் தாசில்தார் மயில்சாமியிடம் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சேடங்காளிபாளையத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ஒன்பது குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களது குடியிருப்புக்கு பின்புறம், 15 அடி ஆழத்துக்கு குழி வெட்டி மண்ணை அள்ளி-யுள்ளனர். இதனால் கால்நடைகள் உள்ளே விழுந்து இறந்து விடு-கின்றன. எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. உரிய நடவடிக்கை எடுத்து குழியை மூட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்-துள்ளனர்.