உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாண் வணிக அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம்

வேளாண் வணிக அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம்

வேளாண் வணிக அலுவலகத்தில்ஏற்றுமதி ஆலோசனை மையம்ஈரோடு, அக். 24-ஈரோடு வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில், 'ஏற்றுமதி ஆலோசனை மையம்' செயல்படுகிறது.வேளாண் துறை மூலம், வேளாண் விளை பொருட்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு, அவற்றின் தரம், மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி நடைமுறைகள் போன்ற வழிமுறைகளை விவசாயிகள் அறிய, 'ஏற்றுமதி ஆலோசனை மையம்' அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஈரோடு வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில், இம்மையம் செயல்படுகிறது. ஏற்றுமதி வாய்ப்புள்ள வேளாண் விளை பொருட்கள், வேளாண் சார்ந்த பொருட்கள் குறித்து, மாவட்ட வாரியான விபரங்கள், பரப்பு, உற்பத்தி, தரம், ஏற்றுமதி சந்தை வாய்ப்புள்ள நாடுகள், ஏற்றுமதி நடைமுறைகள் தொகுத்து பராமரிக்கப்படுகிறது. ஏற்றுமதிக்கு ஏற்ப முதன்மை பதப்படுத்துதல், சிப்பமிடலுக்கு வழிமுறை, வங்கி கடன் பெற வழிகாட்டுதல், வேளாண் கட்டமைப்பு நிதி மூலம் வட்டி மானியம் பெற வழி செய்தலுக்கு உதவுவர். விவசாயிகள், சிறு வேளாண் வணிகர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளருக்கு இலவசமாக வழிகாட்டுதல் வழங்கப்படும். கூடுதல் விபரத்துக்கு துணை இயக்குனர் அலுவலகத்தை, 0424 2903889, 87785 93957 என்ற எண்களில் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை