உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரத்து குறைந்தும் மீன் விலை சரிவு

வரத்து குறைந்தும் மீன் விலை சரிவு

ஈரோடு: ஈரோடு மீன் மார்க்கெட்டில் வரத்து குறைந்தாலும், சில மீன்களின் விலை நேற்று குறைவான விலையில் விற்கப்பட்டது. ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு, 15 டன் கடல் மீன்கள் நாகை, காரைக்கால், துாத்துக்குடி, கேரளா, மங்களூரில் இருந்து நேற்று விற்பனைக்கு வந்தது. வழக்கமாக, 25 டன் வரை மீன்கள் வரும். ஆனால் நேற்று பாதியாக மீன் வரத்து குறைந்தது. கடந்த வாரம் தேங்காய் பறை கிலோ, 1,000க்கு விற்றது நேற்று, 850 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம் மதன மீன், 550 ஆக இருந்தது நேற்று, 450 ரூபாய்க்கு விற்றது. சங்கரா கடந்த வாரம், 450 ஆக இருந்தது நேற்று, 350 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம் வஞ்சிரம் மீன், 1,000க்கு விற்றது நேற்று, 800 ரூபாய்க்கு விற்றது. கருப்பு வாவல் கடந்த வாரம், 800 ஆக இருந்தது நேற்று, 400 ரூபாய்க்கு விற்றது.பிற மீன்கள் விலை விபரம் (கிலோ): ப்ளூ நண்டு--700 ரூபாய், கடல் இறால்-650, முரல்-450, விலாங்கு மீன்-350, சால்மோன் 900, மதன மீன்-450, ஊளி மீன்-500, மத்தி 200, அயிலை-250, கிளி மீன்-550, வெள்ளை வாவல்-950, ரோகு-180, கட்லா 200 ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை