கஞ்சா செடி வளர்த்த விவசாயி சிக்கினார்
அந்தியூர் பர்கூர்மலை ஊசிமலையை சேர்ந்தவர் சித்தன், 50; விவசாயி. இவருடைய நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.எஸ்.ஐ., பாபு தலைமையிலான போலீசார் சோதனையில், ஐந்தடி உயரத்தில் இரண்டு கஞ்சா செடி வளர்ந்திருந்தது. ஆட்டு கொட்டகையில் மூன்று மான் கொம்புகளும் சிக்கின. அதை கைப்பற்றி, கஞ்சா செடிகளை பறித்து, சித்தனை கைது செய்தனர்.