அரசு பஸ் மோதி விவசாயி பலி
தாராபுரம்: தாராபுரம் அருகே, அரசு பஸ் மோதி விவசாயி உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், குண்டடம் அடுத்த ராசிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி, 60. இவர், ராசிபுரத்தில் இருந்து குண்டடம் நோக்கி, நேற்று காலை 10:00 மணியளவில், எலக்ட்ரிக் பைக்கில் சென்றார். அப்போது, அவ்வழியே சென்ற அரசு பஸ், சுப்பிரமணியின் பைக்கில் மோதியது. இதில், படு-காயம் அடைந்த சுப்பிரமணியை, அக்கம், பக்கம் இருந்தவர்கள் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.