உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் விவசாயி சாவு

விபத்தில் விவசாயி சாவு

சென்னிமலை, வெள்ளோட்டை சேர்ந்த விவசாயி முத்துசாமி, 70; உடல் நிலை சரியில்லாததால், மனைவி முத்துலட்சுமி, மகள் சரோஜா ஆகியோர், அவரை ஆம்னி வேனில் அழைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் மதியம் ஈரோடு மருத்துவமனைக்கு சென்றனர். சிகிச்சை முடிந்து மாலையில் ஈரோடு-வெள்ளோடு ரோட்டில் சென்றனர். எதிரே வந்த தோஸ்த் சரக்கு ஆட்டோ நேருக்குநேர் மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துசாமி, டிரைவர் சங்கரன், ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் முத்துசாமி இறந்தார். சங்கரனின் கால் எலும்பு முறிந்தது. வெள்ளோடு போலீசார் வழக்குபதிந்து சரக்கு ஆட்டோ டிரைவரான மோகன்ராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி