மேலும் செய்திகள்
கொசு வலை கூடாரத்தில் பாதுகாக்கப்படும் கால்நடைகள்
06-Nov-2024
வெள்ளகோவில்:திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, உடுமலை, காங்கேயம், வெள்ளக்கோவில் மூலனுார் பகுதிகளில் தெருநாய்கள் அதிகம் உள்ளன. இவை, பட்டிகளுக்குள் புகுந்து, ஆடுகளை வேட்டையாடுவதால், கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து, பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:கடந்த ஆறு மாதங்களில், தெருநாய்களால், 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. இதனால், விவசாயிகளுக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. கள்ள சாராயத்தால் உயிரிழப்போருக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசு, நாய்கடியால் பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்காதது மன வேதனையை ஏற்படுத்துகிறது. நாய்களுக்கு கருத்தடை செய்வது வெறும் கண் துடைப்பாகவே உள்ளது; கருத்தடை செய்வது இப்பிரச்னைக்கு தீர்வாகாது. நாய்க்கடிக்கு பலியாகும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தெரு நாய்களை, தொல்லை தரும் விலங்கு பட்டியலுக்கு மாற்றி, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
06-Nov-2024