உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விளைநிலத்தில் மின் கம்பம் விவசாயிகள் ஆட்சேபனை

விளைநிலத்தில் மின் கம்பம் விவசாயிகள் ஆட்சேபனை

ஈரோடு, கோபி அருகே எம்மாம்பூண்டி, திம்மப்பையன்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி தலைமையிலான விவசாயிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:எங்கள் பகுதியில் கடந்த, 5ல் மின் வாரியத்தினர், எங்கள் அனுமதி பெறாமல், விளை நிலங்களுக்கு மத்தியில் 110 கே.வி., மின் கம்பங்கள் நட்டனர். ஆட்சேபனை தெரிவித்தும், அதை கண்டு கொள்ளாமல் பணியை தொடர்கின்றனர். விளைநிலத்தின் நடுவில் கம்பங்கள் அமைந்தால் விவசாயம் செய்ய இயலாது. நிலத்தில் உள்ள, 50க்கும் மேற்பட்ட தென்னை உள்ளிட்ட மரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளதால், இவ்விடம் வழியாக மின் கம்பம், மின் கம்பிகளை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை