டூவீலரில் கொண்டு வந்தரூ.௧.௬௮ லட்சம் பறிமுதல்சத்தியமங்கலம்: நீலகிரி லோக்சபா தொகுதி, பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆசனுார் அருகே கொள்ளேகால் பிரிவில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூ வீலரில் வந்த லோகநாதனிடம், 1.68 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.திருநம்பியை வெட்டியமாணவர்களுக்கு சிறைபவானி: சேலம் மாவட்டம் செக்கானூரை சேர்ந்த திரும்பி குமரகுருபரன், 25; சமையல் தொழிலாளி. அம்மாபேட்டையில் பாட்டி வீட்டில் தங்கி, கரிய காளியம்மன் கோவில் அருகே ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.கடந்த, 1ம் தேதி மாலை குமரகுருபரன், ஓட்டல் முன் பெஞ்சில் அமர்ந்திருந்தபோது, பைக்கில் வந்த மூன்று பேர் கசாப்பு வெட்டும் கத்தியால் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி விட்டு தப்பியோடினர். புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், ஆசாமிகளை தேடி வந்தனர்.இது தொடர்பாக அம்மாபேட்டை, குதிரைக்கல்மேடு விஜய்கிருஷ்ணன், 20; ஒலகடம் நிதிஷ்குமார், 20, ஆகியோரை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், விஜயகிருஷ்ணனின் தாயிடம் குமரகுருபரன் தவறாக நடக்க முயன்றதால், கொலை செய்ய திட்டமிட்டு வெட்டியது தெரிந்தது. பவானி கோர்ட்டில் இருவரையும் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட இருவரும், நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தில், தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு இளங்கலை படித்து வருகின்றனர்.கரும்பு காட்டில் தீ விபத்துபவானி: அம்மாபேட்டை அருகே செங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமு குட்டி, 50; அதே பகுதியில் ஆறு ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளார். நான்கு ஏக்கரில் அறுவடை முடிந்து, இரண்டு ஏக்கரில் கரும்பு வெட்டும் தருவாயில் இருந்தது. நேற்று மதியம் கரும்பு காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ பரவியதில், இரண்டு ஏக்கரிலான கரும்பும் முற்றிலும் எரிந்து விட்டது. தீயில் சொட்டுநீர் பாசன குழாய்களும் சேதமடைந்தன.பழநி கோவில் நிர்வாகம்ரூ.43.91 லட்சத்துக்கு சர்க்கரை கொள்முதல்கோபி, ஏப். 7-கவுந்தப்பாடி சொசைட்டியில், 43.91 லட்சம் ரூபாய்க்கு, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்தது.ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,550 ரூபாய் முதல், 2,580 ரூபாய் வரை ஏலம் போனது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,480 ரூபாய் முதல், 2,500 ரூபாய் வரை ஏலம் போனது. வரத்தான, 1,725 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 43.91 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.லோக்சபா தேர்தல்புறக்கணிப்பு அறிவிப்புபெருந்துறை,-திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, பெருந்துறை சட்டசபை தொகுதியில் உள்ள, பெருந்துறை பேரூராட்சி பணிக்கம்பாளையத்தை சேர்ந்த கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு காலனியை சேர்ந்த மக்கள், அடிப்படை வசதிகளை செய்து தராரதால், லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக தங்கள் பகுதியில், பல இடங்களில் தட்டிகளை வைத்துள்ளனர். அதில், 'இலவச வீட்டுமனை பட்டாவுக்கு பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை. கழிவு நீர் வடிகால், குடிநீர், பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகளை சரிவர செய்து தரவில்லை. அரசு சலுகைகளை மக்கள் பெயரை சொல்லி, தனி நபர்கள் அபகரித்து கொள்கின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளனர்.