ஐகோர்ட் உத்தரவின்படி கொடி கம்பங்கள் அகற்றம்
ஈரோடு, தமிழகத்தில் பொது இடங்கள், மாநில தேசிய நெடுஞ்சாலை, உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அனைத்து அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கொடிக்கம்பங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த, 396 அரசியல் கட்சி கொடி கம்பங்கள், 12 மதம், 2 ஜாதி சார்ந்த கம்பங்கள், 7 பிற கம்பங்கள் மற்றும் பில்லருடன் வைத்திருந்த கம்பங்கள், 40 என, 457 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் ஈ.வி.என்., சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் இருந்த, 2 கம்யூ., கட்சி தொழிற்சங்க கொடி கம்பங்களை, நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.