தீபாவளி பலகாரம் தயாரிப்போருக்கு உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை
ஈரோடு, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியதாவது: தீபாவளிக்காக இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்கள், விற்பனையாளர்கள், தீபாவளி சீட்டு நடத்துபவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து, உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்ற பின்னரே, உணவு பொருட்களை தயாரித்து விற்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான செயற்கை வண்ணங்கள், கலப்பட பொருள் உபயோகித்து விற்றால், உற்பத்தியாளர், விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திற்காலிகமாக திருமண மண்டபங்கள், வீடுகளில் இனிப்பு, காரம் தயாரித்து விற்பவர்களும் தற்காலிக உரிமம் பெற வேண்டும். தரமற்ற பொருட்களில் பலகாரம் செய்தால், சில நாளில் கெட்டுப்போகும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும். கலர் பொடி, தரம் குறைந்த எண்ணெயால் பலகாரம் தயாரிக்கக்கூடாது. இதுகுறித்து, 94440 42322 என்ற எண்ணில் புகார் செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.