உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 9 வயது சிறுவனை தாக்கிய வளர்ப்பு தந்தைக்கு சிறை

9 வயது சிறுவனை தாக்கிய வளர்ப்பு தந்தைக்கு சிறை

ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரின் மனைவி கோமதி. தம்பதியருக்கு, 11, 9 வயதில் இரு மகன்கள். இதில் ஒன்பது வயது சிறுவன், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர். காய்கறி வியாபாரியான கோமதி, கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி அந்தோணி 36, என்பவரை, கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள சர்ச்சில் எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவரும் ஏற்கனவே திருமணமானவர். மனைவியை பிரிந்து ஓராண்டாக வாழ்ந்தார். கோமதியை திருமணம் செய்த பிறகு, அவருடைய இரண்டு மகன்களுடன், சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனி தேவா வீதியில் அந்தோணி வசித்து வந்தார். மாதம் ஒரிரு முறை மட்டுமே வீட்டுக்கு கேரளாவில் இருந்து அந்தோணி வருவாராம்.இரு நாட்களுக்கு முன் போதையில், மன நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை தாக்கியுள்ளார். சிறுவன் நீண்ட நேரமாக அழுததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் ரத்த காயத்துடன் இருந்துள்ளார். அதிர்ச்சி அடைந்தவர்கள் சிறுவனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பகுதி மக்கள் புகாரின்படி விசாரித்த சூரம்பட்டி போலீசார், அந்தோணியை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை