உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெவ்வேறு இடங்களில் நான்கு பேர் மாயம்

வெவ்வேறு இடங்களில் நான்கு பேர் மாயம்

ஈரோடு, மொடக்குறிச்சி, நன்செய் ஊத்துக்குளி, சின்னியம்பாளையம் செந்துார் கார்டனை சேர்ந்தவர் ராஜன், 70; ஓய்வு பெற்ற சூரம்பட்டி நால்ரோடு ஆவின் பால்பண்ணை ஊழியர். உடல் நிலை சரியில்லாததால் மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார். வீட்டில் இருந்தவர் கடந்த, ௨௧ம் தேதி முதல் காணவில்லை. மனைவி சிவகாமி புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.* அறச்சலுார், கூத்தம்பட்டி, நாச்சிவலசு காலனியை சேர்ந்த நாச்சிமுத்து மகள் கிருத்திகா, 15; அரசு மேல்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி. கடந்த, 17ம் தேதி காலை காலை வீட்டில் இருந்தவர் மாயமாகி விட்டார். தந்தை புகாரின்படி அறச்சலுார் போலீசார் தேடி வருகின்றனர்.* சத்தி, திம்மையன் புதுாரை சேர்ந்த லிங்கராஜின், 14 வயது மகள் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தார். அரசுப்பள்ளியில் சேர்த்து விடுவதாக கூறிய நிலையில் மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து மாயமாகி விட்டார்.* சத்தி, புது கொத்து காட்டை சேர்ந்தவர் குரு போயன், 78; கடந்த, 7ம் தேதி அதிகாலை ஊருக்கு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மகள் ராஜாமணி புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை