உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாளை மறுநாள் முதல் பா.ஜ., பிரசாரம் துவக்கம்

நாளை மறுநாள் முதல் பா.ஜ., பிரசாரம் துவக்கம்

ஈரோடு : நாளை மறுநாள் முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட போவதாக, பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார். ஈரோடு லோக்சபா தொகுதி, பா.ஜ., கூட்டணியில் த.மா.கா.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வுக்கு தொகுதி கிடைக்கும் என தொண்டர்கள், நிர்வாகிகள் எதிர்பார்த்த நிலையில், த.மா.கா.,வுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வேதானந்தம் கூறியதாவது:தொகுதி த.மா.கா.,வுக்கு ஒதுக்கியதில் மகிழ்ச்சி. தமிழகத்தில், 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். 25 தொகுதி என்பது குறைந்தபட்ச இலக்காகும். நாளை மறுநாள் முதல் தேர்தல் பிரசாரத்தை துவங்க உள்ளோம். இந்தியாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தான் வேட்பாளர் என்ற நிலையில் உள்ளோம். எனவே தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுவோம். பா.ஜ.,வினர் கொள்கை பிடிப்புடன் இருப்பவர்கள் என அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்