அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் அசத்தல்
பெருந்துறை: ரோடு மண்டல பாலிடெக்னிக் கல்லுாரி அளவிலான விளையாட்டு போட்டி, துடுப்பதியில் நடந்தது. இதில் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் எட்டு பதக்கம் பெற்றனர். போல்வாட்டில் கொண்டப்பன் தங்க பதக்கம், முகமது அசாலம் குண்டு எறிதலில் வெள்ளி, ஈட்டி எறிதல் வெண்கல பதக்கம் பெற்றார். 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம், 400 மீ., ஓட்டத்தில் கார்த்திகேயன் மற்றும் 400 மீ., தொடர் ஓட்டத்தில் நான்காவது இடம் பிடித்து சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் செண்பகராஜா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.