உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பள்ளிகள் திறப்பு; புத்தகம், நோட்டு வழங்கல்

அரசு பள்ளிகள் திறப்பு; புத்தகம், நோட்டு வழங்கல்

அரசு பள்ளிகள் திறப்பு; புத்தகம், நோட்டு வழங்கல்ஈரோடு, ஜன. 3-அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்புக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஏற்கனவே புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, நோட்டுகள் நேற்று வழங்கப்பட்டன. இதேபோல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கும் நோட்டு, புத்தகம் நேற்று வழங்கப்பட்டதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி