உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறையில் அரசு செயலர் ஆய்வு

பெருந்துறையில் அரசு செயலர் ஆய்வு

பெருந்துறை : பெருந்துறை ஒன்றியம் பொன்முடி மற்றும் சுள்ளிபாளையம் ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலர் செந்தில்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உடனிருந்தார்.பொன்முடியில், சக்கர கவுண்டன்பாளையத்தில், 20,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை தொட்டியில் தானியங்கி கருவி பொருத்தப்பட்டுள்ளதை, அரசு செயலர் செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதை தொடர்ந்து சுள்ளிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவு நகரில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவது குறித்து, மைய பொறுப்பாளருக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.அவருடன் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜார்ஜ் ஆன்டனி மைக்கேல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயற்பொறியாளர் ராமசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ