மேலும் செய்திகள்
அதிகரிக்கும் பஸ் ஸ்டாப்களால் ஊழியர்களுடன் தகராறு
17-Dec-2024
ஈரோடு: போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத டிரைவர், கண்டக்டர் மீது புகார் பதிவு செய்யப்படும் என அரசு போக்குவரத்து கிளை மேலாளர்கள் எச்சரித்துள்ளனர். ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, 11ல் போலீசார், பஸ் டிரைவர்கள், அரசு போக்குவரத்து அலுவலர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் தனியார், அரசு பஸ்கள் பூ மார்க்கெட் வழியே வந்து, மினி பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். மேலும் பஸ் ஸ்டாண்டிற்குள் நகராட்சி கட்டண கழிப்பிடம் அருகே பஸ்களை நிறுத்தி பயணி-களை இறக்கி விடுவதால் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே செல்ல பஸ்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் போக்குவ-ரத்து நெரிசல் ஏற்படுகிறது.பவானி-அந்தியூர் ரேக் அருகே ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டி பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. பஸ்கள் மேட்டூர் சாலை ஸ்வஸ்திக் கார்னர் வழியாக வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டுக்குள் அதி-வேகமாகவும் பஸ்களை இயக்குகின்றனர். ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பஸ்களை நிறுத்த வேண்டும். அதிவேகமாக பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல கூடாது. இந்த விதிகளை மீறும் அரசு, தனியார் பஸ்கள் மீது புகார்கள் பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த விதிகளை அரசு பஸ் டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டும். இதை மீறும் டிரைவர்கள் மீது புகார் பதிவு செய்யப்படும் என அரசு ஈரோடு கிளை-1, கிளை-3 மேலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
17-Dec-2024