| ADDED : ஜூலை 11, 2024 12:21 AM
காங்கேயம்: காங்கேயம் அருகே, பள்ளி மாணவர்களை ஏற்றாமல் சென்றதால், அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திலிருந்து திருப்பூருக்கு (தடம் எண் 16) அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று முன்தினம் காலை, காங்கேயத்திலி-ருந்து புறப்பட்ட ஒரு டவுன்பஸ் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. சிவன்மலை பஸ் ஸ்டாப் சென்றபோது, அங்கு பஸ்சுக்கு காத்திருந்த பள்ளி மாணவர்கள் ஏற முயன்றனர். ஆனால் டிரைவர், கண்டக்டர் அவர்களை ஏற்றாமல் சென்றனர். இந்நிலையில் நேற்று காலை, 8:50 மணிக்கு திருப்பூர் நோக்கி சென்ற அந்த அரசு பஸ்சை சிவன்மலை பஸ்ஸ்டாப்பில் வைத்து பொதுமக்கள் சிறைபிடித்து, மாணவர்களை ஏன் ஏற்ற மறுத்தீர்கள் எனக்கூறி டிரைவர், கண்டக்டரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்-டனர். அங்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இனி வரும் நாட்களில், இதுபோல நடக்காமல் முறையாக மாண-வர்கள் ஏற்றிச் செல்லப்படுவர் என கூறியதை தொடர்ந்து, பொது-மக்கள் பஸ்சை விடுவித்து கலைந்து சென்றனர்.