மேலும் செய்திகள்
வேளாண் குறைதீர் கூட்டம்
28-Aug-2024
ஈரோடு: ஈரோடு மண்டல வைப்பு நிதி ஆணையர் டி.ஆர்.வீரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: பெருந்துறை தாலுகா ஈங்கூர் அக்னி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன கூட்ட அரங்கில் வரும், 27ல் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
28-Aug-2024