உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரியூரில் நாளை குண்டம் விழா; ஏற்பாடு தீவிரம்

பாரியூரில் நாளை குண்டம் விழா; ஏற்பாடு தீவிரம்

பாரியூரில் நாளை குண்டம் விழா; ஏற்பாடு தீவிரம்கோபி, கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, நாளை நடக்கிறது. இதனால் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.பக்தர்கள் வரிசையாக சுவாமி தரிசனம் செய்யவும், தீ மிதிக்கும் பக்தர்கள் வரிசையை கடைபிடிக்க வசதியாக, கோவில் வளாகத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.தற்போதே தீ மிதிக்கும் பக்தர்கள் வரிசையில் இடம்பிடித்து காத்திருக்கின்றனர்.அம்மன் சன்னதி எதிரே, 60 அடி நீள குண்டத்தில், எரி கரும்பு எனும் ஊஞ்சமர கட்டைகள் குவிக்கப்பட்டு வருகிறது. கோபியை சேர்ந்த பக்தர் பிரகாஷ், ஐந்து டன் எரிக்கரும்பை நேற்று அனுப்பி வைத்தார். இடையூறு தவிர்க்கப்படுமா?வழக்கமாக தலைமை பூசாரி, ஆகம விதிப்படி குண்டத்துக்கு பூஜை செய்து, அதன்பின் குண்டம் இறங்கி துவக்கி வைப்பார். அவரை தொடர்ந்து வீரமக்கள், முக்கியஸ்தர்கள், பக்தர்கள் குண்டம் இறங்குவர். அந்த சமயத்தில் தேவையற்ற நபர்கள், குண்டத்தின் அருகே முகாமிட்டு இடையூறு செய்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக கரை வேட்டியினரின் அத்துமீறலால், தீ மிதிக்கும் பக்தர்கள் அசவுகரியமாக கருதுகின்றனர். இந்த கும்பலை கட்டுப்படுத்தவோ அல்லது கண்டிக்கவோ போலீசார், வருவாய் துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த முறை இதுபோன்ற இடையூறு ஆசாமிகளை, குண்டத்தின் அருகில் அனுமதிக்க கூடாது என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை