மேலும் செய்திகள்
குரு பெயர்ச்சி விழா
12-May-2025
சென்னிமலை :சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சி யாக வேள்வி பூஜை நேற்று நடந்தது. இதற்காக நேற்று முன்தினம், கொடிவேரி சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று காலை விநாயகர் வழிபாடு, சிறப்பு யாக வேள்வி, பூர்ணாகுதி நடந்தது. இதை தொடர்ந்து குரு, தட்சிணாமூர்த்தி விக்கிரகங்ளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர்.
12-May-2025