உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரே நாளில் ௨ வீடுகளில் தாராபுரத்தில் கைவரிசை

ஒரே நாளில் ௨ வீடுகளில் தாராபுரத்தில் கைவரிசை

தாராபுரம்,:தாராபுரத்தில், உடுமலை சாலை, ஆத்திக்களம் பிரிவு அருகே வசிப்பவர் காளிதாஸ், 40; நேற்று காலை வெளியே சென்றவர் மாலையில் வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 5,௦௦௦ ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப், எல்.இ.டி., டிவி திருட்டு போனது தெரிந்தது.இதேபோல் சரவணா நகரில், பள்ளி வாகன டிரைவர் சாமிநாதன், 63, வீட்டில், 20 ஆயிரம் ரூபாய், இரண்டு பவுன் நகை திருட்டு போனது. இரு சம்பவங்கள் குறித்த புகாரின்படி தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். ஒரே நாளில் நடந்த இரு திருட்டு, தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ