உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாரல் மழையால் மகிழ்ச்சி

சாரல் மழையால் மகிழ்ச்சி

ஈரோடு: அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், ஈரோடு மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று மதியம், 2:30 மணியளவில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின் சூறாவளி காற்றுடன் சித்தோடு, கொங்கம்பாளையம், கனிராவுத்தர் குளம், பி.பெ.அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் ஈரோடு மாநகரில் மழை பெய்யவில்லை.* பவானி சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை மிதமான மழை பெய்தது. பவானி மற்றும் குருப்பநாய்க்கன்பாயைம், ஊராட்சிக்கோட்டை, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், காடையம்பட்டி உள்ளிட்ட இடங்களில், அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த சாரல் மழையால், இதமான சூழல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை