உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி, அந்தியூரில் கொட்டிய மழை

பவானி, அந்தியூரில் கொட்டிய மழை

ஈரோடு, அக். 4-ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. எனினும் ஈரோடு மாநகரில் தொடர்ந்து பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக பவானியில், 28.60 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு--5, சென்னிமலை-1, கவுந்தப்பாடி 21.20, அம்மாபேட்டை-1.60, வரட்டுபள்ளம் அணை-17, கோபி-2.20, குண்டேரிபள்ளம் அணை-10.20.* அந்தியூர், தவிட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், நகலுார், சின்னதம்பிபாளையம், புதுமேட்டூர், ஈசப்பாறை, பிரம்மதேசம், முனியப்பன்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு, இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. மழையால் நகலுாரில் பல ஏக்கர் பரப்பிலான கரும்பு பயிர் முற்றிலும் சாய்ந்து சேதமானது. இதேபோல் ஆப்பக்கூடல் அருகே வெள்ளாளபாளையத்தில், இரண்டு ஏக்கரிலான கரும்பு தோட்டம் சேதமானது.* பவானி, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், மேட்டுநாசுவம்பாளையம், காடையம்பட்டி, குருப்பநாய்க்கன்பாளயைம், தொட்டிபாளையம் உள்ளிட்ட பல இடங்களில், நள்ளிரவில் கனத்த மழை பெய்தது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், மாத்துார், ஆலாம்பாளையம், வட்டக்காடு, எண்ணமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும், அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, பூதப்பாடி பகுதியிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி