உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகர சாலைகளில் பேட்ஜ் ஒர்க் நெடுஞ்சாலைத்துறை மும்முரம்

மாநகர சாலைகளில் பேட்ஜ் ஒர்க் நெடுஞ்சாலைத்துறை மும்முரம்

ஈரோடு: ஈரோடு மாநகரில் பிரதான சாலைகளில் குழாய் சீரமைப்பு பணி, கேபிள் பதிப்பு பணிக்காக, குழி தோண்டப்பட்டது. பணி முடிந்த பிறகு சீரமைக்க மறந்து விட்டனர்.இதனால் சாலைகள் மேலும் சேதமாகி குண்டு, குழியாக மாறி, வாகன ஓட்டிகளை வதைத்தது. சாலைகளை சீரமைத்து தர வானக ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் முதற்கட்டமாக சாலைகளில் குழியை மட்டும் மூடி செப்பனிடும் பணிகளை (பேட்ஜ் ஒர்க்), நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது. இதன்படி மாநகரின் பிரதான சாலைகளான கருங்கல்பாளையம், பார்க் ரோடு, பவானி ரோடு, மணிக்கூண்டு ஆகிய இடங்களில் சேதமான இடங்களில் ஜல்லிக்கற்கள் போட்டு, தார் ஊற்றி சமன் செய்தனர். மாநகரில் மற்ற சாலைக-ளிலும் செப்பனிடும் பணி நடக்கும் என்று தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !