உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சந்தைக்கு வந்த குதிரைகள் மர்மமான முறையில் இறப்பு

சந்தைக்கு வந்த குதிரைகள் மர்மமான முறையில் இறப்பு

அந்தியூர்:கோவில் பண்டிகையை முன்னிட்டு, விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட, ஆறு நாட்டு குதிரைகள் மர்மமாக உயிரிழந்தன. ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் தேர் திருவிழா ஆக., 13 முதல், 16 வரை நடக்கிறது. இதற்காக தமிழகம், கர்நாடக மாநிலத்திலிருந்து கத்தியவார், மார்வார் மற்றும் நாட்டு குதிரைகளை விற்பனைக்காக கொண்டு வருவர். கர்நாடக மாநிலம், மைசூர், காந்திநகரை சேர்ந்த சபியுல்லா கான், இரண்டு நாட்களுக்கு முன், குதிரை சந்தைக்கு, 24 நாட்டு குதிரைகளை விற்பனைக்கு கொண்டு வந்தார். நேற்று காலை, ஆறு குதிரைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்தியூர் போலீசார் விசாரணையில், அப்பகுதி விவசாயி ஒருவர், கரும்பு பயிருக்கு பாய்ச்சுவதற்காக, பிளாஸ்டிக் டிரம்மில் யூரியா உப்பு கலந்து வைத்தது தெரியாமல், அந்த நீரை எடுத்து குதிரை பராமரிப்பாளர்கள், குதிரைக்கு குடிக்க கொடுத்ததால் உயிரிழந்திருக்கலாம் என தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை