/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கண் துடைப்பு ஆசிரியர் கவுன்சிலிங்கில் எதிர்பார்த்த இடம் எப்படி கிடைக்கும்?
கண் துடைப்பு ஆசிரியர் கவுன்சிலிங்கில் எதிர்பார்த்த இடம் எப்படி கிடைக்கும்?
ஈரோடு, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.தமிழ் ஆசிரியர்கள்-40, ஆங்கில ஆசிரியர்கள்-11, கணிதம்-29, அறிவியல்-69, சமூக அறிவியல்-31 என மொத்தம் 180 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு மாவட்டத்துக்குள் தமிழ்-58, ஆங்கிலம்-116, கணிதம்-134, அறிவியல்-87, சமூக அறிவியல்-71 பேர் என 466 பேர் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 72 ஆசிரியர்கள் புதிய பணியிடங்களை பெற்றனர். 150 ஆசிரியர்களுக்கு எதிர்பார்த்த இடம் கிடைக்கவில்லை. பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது. இதற்கு, 300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.