அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி
அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலிபவானி, அக். 11-அ.தி.மு.க., சார்பில் சொத்துவரி, குடிநீர் வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு காரணமான, தமிழக அரசை கண்டித்து, பவானி நகராட்சி அலுவலகம் முன், மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. பவானி நகர செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பவானி எம்.எல்..,ஏ கருப்பணன் பேசினார்.அவர் பேசுகையில், ''ஊழல் செய்து சிறை சென்று வந்த செந்தில்பாலாஜியை, தி.மு.க.,வினர் கொண்டாடும் அளவுக்கு, அவர் என்ன தியாகியா? அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், அவர் அமைச்சராக இருந்தபோது நாங்களே அவரை சந்திக்க முடியாது. தி.மு.க., ஆட்சியில், கஞ்சா, போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. கஞ்சா, போதை பொருள் விற்பவர்களை, 'என்கவுன்டரில்' சுட வேண்டும். பாலியல் குற்றங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.