உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கபாலீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கபாலீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு :ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் விசாக தேர்த்திருவிழா கடந்த மாதம், 30ல் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. வருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் எழுந்தருளினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, எம்.எல்.ஏ., சந்திரகுமார் முன்னிலை வகித்து, வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இழுத்து சென்றனர். ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, மீனாட்சிசுந்தரனார் சாலை, காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலை மாலை, 4:00 மணிக்கு அடைந்தது. இத்தேருடன், விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் முருகன், வருணாம்பிகை அம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தனி சப்பரத்தில் பவனி வந்தன. தேரோட்டத்தின் போது கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் சந்திரசேகரர், தருணேந்துசேகரீ காட்சியருளினர். தொடர்ந்து நாளை மாலை, 5:30 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத நடராஜர் ஸ்ரீமஞ்சத்திலும், சிவகாமி அம்மன் கற்பக விருட்சத்திலும் ரத வீதி நிகழ்வும், மகா நீராஞ்சனமும் நடக்கிறது. 9ம் தேதி காலை, 6:30 மணிக்கு வாருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி, மூல மூர்த்திக்கு யாக கட கும்பாபிேஷகமும், மாலை, 5:00 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 10ல் மகா ஸ்நபனம், சண்டிகேஸ்வரர் பூஜை, பைரவர் யாகம் நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை