பட்டாசு கடை தற்காலிக உரிமம் 12க்குள் விண்ணப்பிக்க யோசனை
பட்டாசு கடை தற்காலிக உரிமம்12க்குள் விண்ணப்பிக்க யோசனைஈரோடு, அக். 2-தீபாவளி பண்டிகை வரும், 31ல் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்காக ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர், வெடி பொருள் சட்டப்படி அதற்கான உரிமம் பெற வேண்டும்.இதன்படி, மாவட்டத்தில் கடை வைத்து நடத்த உரிமம் பெற விரும்புவோர் வரும், 12க்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க, 51 பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளதாக, தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.