உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைந்த கட்டணத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க யோசனை

குறைந்த கட்டணத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க யோசனை

குறைந்த கட்டணத்தில்'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்க யோசனைஈரோடு, ஜன. 2-ஈரோடு மாவட்டத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் பண்ணை சார்ந்த வாழ்வாதார திட்டத்தில், 'நமோ ட்ரோன்' திட்டத்தில், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு விவசாய பயன்பாட்டுக்காக 'ட்ரோன்' வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டம், கிராமங்களில் பயிர்களுக்கு எளிதான முறையிலும், குறைந்த விலையிலும், திரவ உரங்களையும், திரவ பூச்சி மருந்துகளையும் தெளிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. ட்ரோன் மருந்து தெளிப்பான் இயந்திரத்தின் மூலம், இரண்டு ஏக்கர் விவசாய நிலத்துக்கு, 30 நிமிடத்தில் மருந்து தெளிக்கும். ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிக்க, 350 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.விவசாயிகள், பயிர்களுக்கு எளிதான முறையிலும், குறைவான விலையிலும் ட்ரோன் முறையில் மருந்து தெளிக்க, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாரம், பழமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள மகளிர் குழு உறுப்பினர் நிர்மலாதேவியை - 94868 50773, கோபி அளுக்குளி பஞ்சாயத்தில் உள்ள மகளிர் குழு உறுப்பினர் தேவியை- 82203 15861 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி