| ADDED : மார் 17, 2024 02:43 PM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேர்தல் செயல்பாட்டின்போது, ஒரு நபரின் வாக்குரிமையை பறிக்கும் நோக்கில் அந்நபருக்கு பணம், பொருள் வழங்குவது, இந்திய தண்டனைப்படி குற்றம். இதற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் கூடிய தண்டனைக்கு வழி வகுக்கப்படும். அதுபோல, எந்த வேட்பாளரையோ அல்லது வாக்காளரையோ, பிற நபரையோ அச்சுறுத்தினால், அவர்களுக்கும் அதேபோன்ற தண்டனை விதிக்கப்படும். லஞ்சம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவும், வாக்காளர்களுக்கு மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் புகார் செய்ய விரும்பினால், கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை, 1800 425 0424 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.