உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விசைத்தறி போர்வைகளை கைத்தறி போர்வை என விற்போர் அதிகரிப்பு; சென்னிமலை நெசவாளர் கொதிப்பு

விசைத்தறி போர்வைகளை கைத்தறி போர்வை என விற்போர் அதிகரிப்பு; சென்னிமலை நெசவாளர் கொதிப்பு

சென்னிமலை: சென்னிமலையில் விசைத்தறிகளில் நெய்த போர்வையை, கைத்தறியில் நெய்தது என கூறி விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாக, நெசவாளர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.சென்னிமலை கைத்தறியில் நெய்யப்படும் போர்வை ரகம், படுக்கை விரிப்புகள் பிரசித்தி பெற்றவை. இதற்காக சென்னிமலை நகரில் போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை உறை, திரைச்சீலை வாங்க தமிழகம் மட்டுமல்லாமல், வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சென்னிமலை வருகின்றனர். ஆர்டரின் பேரில் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் ஒரு சில போர்வை ரகங்கள் விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்டு, கைத்தறி ரகங்கள் என விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் கைத்தறி நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசால், 1985ம் ஆண்டு கைத்தறிரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு, 1998 முதல், 11 ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.போர்வை உள்ளிட்ட கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது. இதை கண்காணிக்க கைத்தறி ஆணையரால் சரக வாரியாக பறக்கும் படை, 2023ல் அமைக்கப்பட்டது.இக்குழுவினர் ஆய்வு செய்து விதி மீறுவோர் மீது நடவடிக்கையும் எடுத்தனர். தற்போது ஆய்வு, கண்காணிப்பு குறைந்துள்ளது. இதனால் விசைத்தறிகளில் நெய்யப்படும் போர்வைகள், கைத்தறி போர்வை எனக்கூறி விற்பனை அமோகமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதிகாரிகள் ஆய்வு பணிகளில் சுணக்கம் காட்டாமல், அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க, கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை