ஐ.சி.எஸ்.இ., பொதுத்தேர்வில் ஈங்கூர் தி யுனிக் அகாடமி அபாரம்
பெருந்துறை:பெருந்துறை அருகே ஈங்கூரில் உள்ள தி யுனிக் அகாடமி பள்ளி, 2024-25 கல்வியாண்டில், 10ம் வகுப்பு (ஐ.சி.எஸ்.இ.,) பொதுத்தேர்வில், 13வது ஆண்டாகவும், 12ம் வகுப்பு (ஐ.எஸ்.சி.,) பொதுத் தேர்வில், 11வது ஆண்டாகவும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.ஐ.எஸ்.சி., தேர்வில் காருண்யா மகாதேவன், 94 சதவீதம் மதிப்பெண்களுடன் முதலிடம், தனுசூர்யா பரமேஷ்வரன், 92 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், பவின் பிரனேஷ் ஜெகதீஷ்வரன், 91.5 சதவீதம் மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பெற்றனர்.ஐ.சி.எஸ்.இ., தேர்வில் தீபிதா முருகன், 96 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம், பாலசூர்யா சேகர், 95 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், ஜெய் வெங்கடேஷ் ராமசாமி, 93 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கு, பள்ளி தலைவர் இளங்கோ ராமசாமி, முதல்வர் உமையவள்ளி இளங்கோ, பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.