உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புன்னம் பஞ்., பகுதியில் வளர்ச்சி பணி துவக்கம்

புன்னம் பஞ்., பகுதியில் வளர்ச்சி பணி துவக்கம்

பவானி: பவானி யூனியன் புன்னம் பஞ்.,ல், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி நேற்று தொடங்கியது.நல்லாநாயக்கனுாரில், 10.57 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால்; புன்னம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, 4.43 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால்; வண்ணாம்பாறையில், 10 லட்சம் ரூபாயில் கான்கிரீட் சாலை, செங்கோடம்பாளையத்தில், 7.68 லட்சம் ரூபாயில் வடிகால் பணி என, 32.68 லட்சம் ரூபாயில் மதிப்பிலான பணிகளை, பவானி எம்.எல்.ஏ., கருப்பண்ணன் பூஜை செய்து தொடங்கி வைத்தார். சேர்மன் பூங்கோதை வரதராஜ், பவானி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் தங்கவேலு, ஒன்றிய கவுன்சிலர்கள் குப்புசாமி, ஊராட்சி செயலாளர் நதியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ