மார்க்கெட் இடமாற்றம் கமிஷனரிடம் வலியுறுத்தல்
மார்க்கெட் இடமாற்றம் கமிஷனரிடம் வலியுறுத்தல்பவானி, அக். 25-பவானி தினசரி மார்க்கெட்டை, பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகே மாற்ற, வியாபாரிகளில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேசமயம் மார்க்கெட்டை புதுப்பிக்க, நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி, பணி துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று பவானி வந்த, இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், வியாபாரிகளின் கோரிக்கை ஏற்று, மார்க்கெட்டை பார்வையிட்டார். பிறகு பவானி நகராட்சி கமிஷனர் மோகன்குமாரை சந்தித்தார். மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து ஆலோசனை செய்யும்படியும், இடமாற்றம் செய்தால் திருப்பூர் எம்.பி., நிதியில் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் வலியுறுத்தினார்.