உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

ஈரோடு :ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உலக செவிலியர் தினம் கொண்டாடினர்.மாவட்ட இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சாந்தகுமாரி தலைமை வகித்தார். டாக்டர் வேதமணி, ஒருங்கிணைப்பாளர் சகிலா குத்து விளக்கேற்றினர். மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் சசிரேகா, செவிலியர் சங்கம் உஷா, சரளா, ஜெகருன்ஷா, ப்ரத்தா, வளர்மதி, லோகேஸ்வரி ஆகியோர் செவிலியர் தினம் குறித்து பேசி, உறுதிமொழி ஏற்றனர்.செவிலியர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் இனிப்பு வழங்கி, டாக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.* பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே, ௧2ம் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.இந்நாளான நேற்று, பவானி அரசு மருத்துவமனை செவிலியர்கள் கேக் வெட்டி வாழ்த்துக்களை பரிமாறி, உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ