போட்டிகளுக்கு உதவித்தொகை பெற நலவாரிய உறுப்பினர்களுக்கு அழைப்பு
ஈரோடு: தமிழகத்தில் உள்ள, 19 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்-களில், உறுப்பினராக தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.இந்த உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்-தொகை, கண் கண்ணாடிக்கு உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்குக்கு உதவித்தொகை, விபத்து மரண நிவாரணம், பணி-யிட விபத்துக்கு நிவாரணத்தொகை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூ-தியம் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. தற்போது இவர்களின் குழந்தைகள்,ஸ உரிய அமைப்பால் அங்கீகரிக்கப்-பட்ட விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்கும்-போது, ஆண்டில் ஒரு முறை மட்டும், 25,000 ரூபாய், பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்கும்போது ஆண்டுக்கு ஒரு முறை, 50,000 ரூபாய் ஊக்கத்தொகையாக அரசு வழங்குகிறது. இப்போட்டி-களில் பங்கேற்போர், www.tnuwwb.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பித்து பயன் பெறலாம்.