உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

ஈரோடு கவுந்தப்பாடி கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை கூட்ட அரங்கில், பவானிசாகர் அணை பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில விவசாய சங்க தலைவர் வெங்கடாசலம், பவானி நதி, கொடிவேரி பாசன சங்க தலைவர் சுபிதளபதி பேசினர். பவானிசாகர் அணைக்கு உட்பட்ட கீழ்பவானி, கொடிவேரி, காளிங்கராயன் பாசன திட்டங்களில் பதிவு பெற்ற ஆயக்கட்டு நிலங்களுக்கு கடைமடை வரை முழுமையாக தண்ணீர் ஆண்டு முழுவதும் கிடைக்காத நிலையில், புதிய திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி