உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 929 ஏக்கர் நெற்பயிருக்கு மட்டுமே காப்பீடு விவசாயிகள் மத்தியில் குறைகிறதா ஆர்வம்

929 ஏக்கர் நெற்பயிருக்கு மட்டுமே காப்பீடு விவசாயிகள் மத்தியில் குறைகிறதா ஆர்வம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 929 ஏக்கர் நெற்பயிருக்கு மட்டுமே காப்-பீடு செய்துள்ளனர்.விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் தேசிய அளவில் செயல்படுகிறது.ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், மாவட்ட அளவில், 28 பிர்கா அறிவித்துள்ளனர். அப்பகுதியில் மட்டும் ஏக்-கருக்கு, 573 ரூபாய் காப்பீடு தொகை செலுத்த வேண்டும். இதில், 425 விவசாயிகள், 929 ஏக்கர் நெற்பயிருக்கு மட்டும் காப்பீடு செய்-துள்ளனர். ஆனால் மாவட்டத்தில் நடப்பாண்டு, 42,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் ஏனோ காப்பீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை.இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் காப்பீடு நிறுவனத்தை மாற்றுகின்-றனர். அவர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடந்த, 2017-18ல் காப்பீடு செய்தவர்களில் பலருக்கு இன்னும் இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. அடுத்தடுத்த ஆண்டுக-ளிலும், அதே நிலையே நீடிக்கிறது. தவிர பிர்கா வாரியாக பாதிப்பை கணக்கிடாமல், தனி நபர் காப்பீட்டை அங்கீகரித்தால், விவசாயிகள் கூடுதலாக காப்பீடு செய்ய முன்வருவார்கள். இவ்-வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை