உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஐ.டி., நிறுவன ஊழியர் மன உளைச்சலில் விபரீதம்

ஐ.டி., நிறுவன ஊழியர் மன உளைச்சலில் விபரீதம்

ஈரோடு: ஈரோடு, வாய்க்கால் மேடு, இந்தியன் நகர் முதலாவது வீதியை சேர்ந்த சீராளன் மகன் பிரவீன், 35; எம்.இ. பட்டதாரி. திருமணம் ஆகாதவர். பெங்களூருவில் ஒரு ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்தார். சில நாட்களாக வீட்டிலிருந்து பணிபுரிந்தார். மன உளைச்சலால் யாருடனும் பேசாமல் இருந்தார். நேற்று முன்தினம் மாலை வாக்கிங் செல்வதாக வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடியபோது அதே பகுதியில் கிரிக்கெட் மைதானம் அருகே கிணற்றின் அருகில் அவரது செருப்பு கிடந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஈரோடு தாலுகா போலீசாருக்கு புகார் தரப்பட்டது. அவர்கள் தீயணைப்பு நிலைய வீரர்களை வரவழைத்து தேடியபோது, பிரவீன் சடலமாக மீட்கப்பட்டார். மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை