உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போனஸ் கோரி ஜமக்காள நெசவு தொழிலாளர் மனு

போனஸ் கோரி ஜமக்காள நெசவு தொழிலாளர் மனு

பவானி, ஜமக்காள கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில், தீபாவளி போனஸ் குறித்த கூட்டம் பவானியில் நேற்று நடந்தது. ஜமக்காள நெசவுத் தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் தொடர்பாக, இதுவரை முதலாளிகள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க வேண்டும். இல்லையேல் நாளை (புதன்கிழமை) பவானியில் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவு செய்தனர். இதுகுறித்த கோரிக்கை மனுவை, பவானி தாசில்தார் சரவணனிடம், 50க்கும் மேற்பட்டோர் சென்று வழங்கினர். சம்பந்தப்பட்ட முதலாளிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, போனஸ் பெற்று தரவும், தாசில்தாரிடம் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி